என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » எஜமான் குடும்பம்
நீங்கள் தேடியது "எஜமான் குடும்பம்"
கேரளாவில் பெய்து வரும் கன மழையால் நிலச்சரிவில் இருந்து தனது எஜமானையும், அவருடைய மனைவியையும் ஒரு செல்ல நாய் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. #DogSaved #KeralaFamily #Landslide
இடுக்கி:
கேரளாவில் பெய்து வரும் கன மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பதில் ராணுவம், விமானப்படை, கடலோர காவல்படையை சேர்ந்த வீரர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நிலச்சரிவில் இருந்து தனது எஜமானையும், அவருடைய மனைவியையும் ஒரு செல்ல நாய் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. இடுக்கி மாவட்டம் கீர்த்திகோடு என்னும் மலைக்கிராமத்தில் மனைவியுடன் வசித்து வருபவர் மோகனன். இவர், ‘ராக்கி’ என்னும் நாயை தனது வீட்டில் செல்லமாக வளர்த்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ராக்கி திடீரென்று பலமாக குரைத்தது.
வெகு நேரமாகியும் அது குரைப்பதை நிறுத்தவில்லை. இதனால் திடுக்கிட்டு எழுந்த மோகனனும், அவருடைய மனைவியும் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது அவர்களின் வீடு நிலச்சரிவு ஏற்பட்டு முழுவதுமாக சரிந்து விழுந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மோகனனும், அவருடைய மனைவியும் தங்களுடைய உயிரை தக்க நேரத்தில் காப்பாற்றிய ராக்கியை நன்றிப் பெருக்குடன் உச்சி முகர்ந்து கொஞ்சி மகிழ்ந்தனர்.
மோகனன், தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் இந்த தகவலை தெரிவித்து உள்ளார். #DogSaved #KeralaFamily #Landslide

×

X